Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 40

1பின்னும் யெகோவா யோபுக்கு பதிலாக: 1

2“சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்? 1 தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிக்கிறவன் இவைகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார். 1

3அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக: 1

4இதோ, நான் எளியவன்; 1 நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்; 1 என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். 1

5நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். 1

6அப்பொழுது யெகோவா பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார். 1

7இப்போதும் மனிதனைப்போல நீ ஆடையைக்கட்டிக்கொள்; 1 நான் உன்னைக் கேட்பேன்; 1 நீ எனக்கு பதில் சொல். 1

8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? 1 நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? 1

9தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ? 1 அவரைப்போல இடிமுழக்கமாகச் சத்தமிடமுடியுமோ? 1

10இப்போதும் நீ முக்கியத்துவத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, 1 மகிமையையும் கனத்தையும் அணிந்துகொண்டு, 1

11நீ உன் கோபத்தின் கடுமையை வீசி, 1 அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு, 1

12பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, 1 அவனைப் பணியவைத்து, 1 துன்மார்க்கரை அவர்கள் இருக்கிற இடத்திலே மிதித்துவிடு. 1

13நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து, 1 அவர்கள் முகங்களை மறைவான இடத்திலே கட்டிப்போடு. 1

14அப்பொழுது உன் வலதுகை உனக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று சொல்லி 1 நான் உன்னைப் புகழுவேன். 1

15இப்போதும் பிகெமோத்தை + 40:15 யானையை போன்ற பெரிய மிருகம் நீ கவனித்துப்பார்; 1 உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; 1 அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும். 1

16இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், 1 அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது. 1

17அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; 1 அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது. 1

18அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், 1 அதின் கால்கள் இரும்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது. 1

19அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு, 1 அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார். 1

20காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும். 1

21அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், 1 சேற்றிலும் படுத்துக்கொள்ளும். 1

22தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும். 1

23இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; 1 யோர்தான் நதியளவு தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும். 1

24அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்? 1 மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?

← Job 39Read In The App, Free →Job 41 →

Study Job 40

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142