Job 3
1அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
2வசனித்துச் சொன்னது என்னவென்றால்: 1
3நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக. 1
4அந்த நாள் இருளாக்கப்படுவதாக; 1 தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும், 1 வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும், 1
5கடுமையான இருளும் 1 மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, 1 மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக. 1
6அந்த இரவை இருள் பிடிப்பதாக; 1 வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக. 1
7அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக. 1
8நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும், 1 அதைச் சபிப்பார்களாக. 1
9அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, 1 அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக. 1
10நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், 1 என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே. 1
11நான் கர்ப்பத்தில் அழியாமலும், 1 கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன? 1
12என்னை ஏந்திக்கொள்ள மடியும், 1 நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன? 1
13அப்படியில்லாதிருந்தால், 1 அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து, 1
14பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும், 1
15அல்லது, பொன்னை உடையவர்களும், 1 தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே. 1
16அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும், 1 வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே. 1
17துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; 1 பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள். 1
18சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்; 1 ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை. 1
19சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்; 1 அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான். 1
20மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, 1 புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், 1
21கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து, 1
22அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும், 1 மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன? 1
23தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, 1 தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன? 1
24என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; 1 என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது. 1
25நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; 1 நான் பயப்பட்டது எனக்கு வந்தது. 1
26எனக்குச் சுகமுமில்லை, 1 நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை; 1 எனக்குத் துன்பமே வந்தது.