Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 20

1அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக: 1

2“இதற்காக பதில் கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறதினால் 1 நான் விரைவாகச் சொல்லுகிறேன். 1

3நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; 1 ஆனாலும் உணர்வினால் என் ஆவி மறுமொழி சொல்ல என்னை ஏவுகிறது. 1

4துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், 1 மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிடம்மாத்திரம் நிற்கும் என்பதையும், 1

5அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் 1 இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ? 1

6அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், 1 அவனுடைய தலை மேகங்கள்வரை எட்டினாலும், 1

7அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; 1 அவனைக் கண்டவர்கள், 1 அவன் எங்கே? என்பார்கள். 1

8அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; 1 இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான். 1

9அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; 1 அவன் இருந்த இடம் இனி அவனைக் காண்பதில்லை. 1

10அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; 1 அவன் பறித்ததை அவன் + 20:10 அவனுடைய பலத்த கை கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும். 1

11அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, 1 அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும். 1

12பொல்லாப்பு அவனுடைய வாயிலே இனிமையாயிருப்பதால், 1 அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி, 1

13அதை விடாமல் அடக்கி, 1 தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும், 1

14அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி, 1 அவனுக்குள் விரியன்பாம்புகளின் விஷமாகப்போகும். 1

15அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்; 1 தேவன் அதை அவனுடைய வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார். 1

16அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; 1 விரியனின் நாக்கு அவனைக் கொல்லும். 1

17தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை. 1

18தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; 1 அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் செல்வத்திற்குச் சரியாயிருக்கும்; 1 அவன் மகிழ்ச்சியில்லாதிருப்பான். 1

19அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, 1 தான் கட்டாத வீட்டை அபகரித்தபடியினாலும், 1

20தன் வயிறு திருப்தி அடையாமல் இருந்ததினாலும், 1 அவன் விரும்பின காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை. 1

21அவனுடைய ஆகாரத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; 1 ஆகையால் அவனுடைய செல்வம் நிலைநிற்பதில்லை. 1

22அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், 1 அவனுக்கு வேதனை உண்டாகும்; 1 சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும். 1

23தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், 1 அவர் அவன்மேல் தமது கோபத்தின் கடுமையை வரவழைத்து, அவன் சாப்பிடும்போது, 1 அதை அவன்மேல் வரச்செய்வார். 1

24இரும்பு ஆயுதத்திற்கு அவன் தப்பியோடினாலும் வெண்கல அம்பு அவனை உருவ எய்யும். 1

25உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், 1 மின்னுகிற அம்பு அவன் ஈரலையும் உருவிப்போகும்; 1 பயங்கரங்கள் அவன்மேல் வரும். 1

26அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; 1 அணையாத நெருப்பு அவனை எரிக்கும்; 1 அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் பாடு அநுபவிப்பான். 1

27வானங்கள் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும். 1

28வெள்ளத்தினால் அவனுடைய வீட்டின் சம்பத்துப் கரைந்து போய்விடும்; 1 தேவனுடைய கோபம் வெள்ளம் போல் அவைகள் மேல் ஊற்றப்படும் கரைந்து போகும். 1

29இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், 1 அவனுடைய செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் பங்காகும்” என்றான்.

← Job 19Read In The App, Free →Job 21 →

Study Job 20

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142