Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 35

1பின்னும் எலிகூ மறுமொழியாக: 1

2“என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று 1 நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ? 1

3நான் பாவியாக இல்லாததினால் 1 எனக்கு நன்மை என்ன? பலன் என்ன? என்று சொன்னீர். 1

4உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன். 1

5நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, 1 உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும். 1

6நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? 1 உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு? 1

7நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? 1 அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்? 1

8உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும், 1 உம்முடைய நீதியினால் மனுமக்களுக்கு லாபமும் உண்டாகும். 1

9அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, 1 வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள். 1

10பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும், 1 ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி, 1

11என்னை உண்டாக்கினவரும், 1 இரவிலும் பாடல்பாட அருள்செய்கிறவருமாகிய என்னை உருவாக்கின கர்த்தராகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை. 1

12அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்; 1 அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை. 1

13தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், 1 சர்வவல்லமையுள்ள தேவன் அதைக் கவனிக்கமாட்டார். 1

14அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; 1 ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; 1 ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும். 1

15இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது; 1 அவர் இன்னும் ஒன்றையும் குறையில்லாத முறையில் தண்டிக்கவில்லை. 1

16ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, 1 அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.

← Job 34Read In The App, Free →Job 36 →

Study Job 35

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142