Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 14

1“பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் 1 வருத்தம் நிறைந்தவனுமாயிருக்கிறான். 1

2அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்; 1 நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். 1

3ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, 1 உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ? 1

4அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ? 1 ஒருவனுமில்லை. 1

5அவனுடைய நாட்கள் இவ்வளவுதான் என்று குறிக்கப்பட்டிருப்பதால், 1 அவனுடைய மாதங்களின் எண்ணிக்கை உம்மிடத்தில் இருக்கிறது; 1 அவன் கடந்துபோகமுடியாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். 1

6அவன் ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலை முடிந்தது என்று நிம்மதியடையும்வரை அவன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். 1

7ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; 1 அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், 1 அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; 1

8அதின் வேர் தரையிலே பழையதாகி, 1 அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், 1

9தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, 1 இளமரம்போலக் கிளைவிடும். 1

10மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், 1 மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே? 1

11தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, 1 வெள்ளம் வற்றிக் காய்ந்துபோகிறதுபோல, 1

12மனிதன் படுத்துக்கிடக்கிறான், 1 வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை, 1 தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை. 1

13நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, 1 உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, 1 என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். 1

14மனிதன் இறந்தபின் பிழைப்பானோ? 1 எனக்கு மாறுதல் எப்போது வருமென்று 1 எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். 1

15என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு பதில் சொல்லுவேன்; 1 உமது கைகளின் செயல்களின்மேல் விருப்பம் வைப்பீராக. 1

16இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; 1 என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். 1

17என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு 1 முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒன்று சேர்த்தீர். 1

18மலைகளெல்லாம் விழுந்து கரைந்துபோகும்; 1 கன்மலை தன் இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோகும். 1

19தண்ணீர் கற்களைக் குடையும்; 1 பெருவெள்ளம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; 1 அப்படியே மனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர். 1

20நீர் என்றைக்கும் அவனைப் பலமாக நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; 1 அவனுடைய முகரூபத்தை மாற்றி அவனை அனுப்பிவிடுகிறீர். 1

21அவனுடைய பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரமாட்டான்; 1 அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனிக்கமாட்டான். 1

22அவனுடைய உடல் அவனிலிருக்கும்வரை அதற்கு வியாதியிருக்கும்; 1 அவனுடைய ஆத்துமா அவனுக்குள்ளிருக்கும்வரை அதற்குத் துக்கமுண்டு” என்றான்.

← Job 13Read In The App, Free →Job 15 →

Study Job 14

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142