Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 33

1“யோபே, என் நியாயங்களைக் கேளும்; 1 என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். 1

2இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; 1 என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும். 1

3என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; 1 நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாக பேசும். 1

4தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; 1 சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது. 1

5உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்; 1 நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும். 1

6இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; 1 நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். 1

7இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; 1 என் கை உம்மேல் பாரமாயிருக்காது. 1

8நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும், 1 நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்: 1

9நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன், 1 நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை. 1

10இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார், 1 என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார். 1

11அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து, 1 என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர். 1

12இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்; 1 மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார். 1

13அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக் 1 பதில் + 33:13 தேவன் மனிதர்களின் காரியத்தில் பதில் தருவதில்லை சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்? 1

14தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை 1 இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே. 1

15ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி, 1 அவர்கள் படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது, 1

16அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, 1 அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே பயமுறுத்தி, 1

17மனிதன் தன்னுடைய செயலைவிட்டு நீங்கவும், 1 மனிதருடைய பெருமை அடங்கவும் செய்கிறார். 1

18இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும், 1 அவன் உயிரைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார். 1

19அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், 1 தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான். 1

20அவன் உயிர் அப்பத்தையும், 1 அவனுடைய ஆத்துமா ருசிகரமான ஆகாரத்தையும் வெறுக்கும். 1

21அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து, 1 மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது. 1

22அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது. 1

23ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தேவ தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு, 1 அவனுக்கு சாதகமாக இருந்தாரென்றால், 1

24அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க: 1 நீர் அவனைக் காப்பாற்றும்; 1 மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார். 1

25அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்; 1 தன் இளவயது நாட்களுக்குத் திரும்புவான். 1

26அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது, 1 அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்துடன் பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, 1 அந்த மனிதனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார். 1

27அவன் மனிதரை நோக்கிப் பார்த்து: 1 நான் பாவம் செய்து செம்மையானதைப் புரட்டினேன், 1 அது எனக்குப் பலன் கொடுக்கவில்லை. 1

28என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க, 1 அவர் அதை காப்பாற்றுவார் 1 ஆகையால் என் உயிர் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான். 1

29இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், 1 அவனை உயிருள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பதற்கும், 1

30அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார். 1

31யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; 1 நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும். 1

32சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால், 1 எனக்குப் பதில் கொடும்; 1 நீர் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க எனக்கு ஆசையுண்டு. 1

33ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும், 1 மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.

← Job 32Read In The App, Free →Job 34 →

Study Job 33

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142