Job 9
1அதற்கு யோபு மறுமொழியாக: 1
2“ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; 1 தேவனுக்கு முன்பாக மனிதன் நீதிமானாயிருப்பதெப்படி? 1
3அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால், 1 ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே. 1
4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; 1 அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்? 1
5அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்; 1 தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார். 1
6பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார். 1
7அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; 1 அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார். 1
8அவர் ஒருவரே வானங்களை விரித்து, 1 சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர். 1
9அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், 1 அறுமீனையும், தெற்கு மண்டலங்களையும் உண்டாக்கினவர். 1
10ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், 1 எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1
11இதோ, அவர் என் அருகில் போகிறார், 1 நான் அவரைப் பார்க்கமுடியவில்லை; அவர் கடந்துபோகிறார், 1 நான் அவரை அறியவில்லை. 1
12இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்? 1 நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்? 1
13தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தமாட்டார்; 1 ஒருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும். 1
14இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், 1 அவருடன் வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்? 1
15நான் நீதிமானாயிருந்தாலும் அவருடன் வழக்காடாமல், 1 என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்காகக் கெஞ்சுவேன். 1
16நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும், 1 அவர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் என்று நம்பமாட்டேன். 1
17அவர் புயலினால் என்னை முறிக்கிறார்; 1 காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார். 1
18நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், 1 கசப்பினால் என்னை நிரப்புகிறார். 1
19பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; 1 நியாயத்தைப் பார்த்தால் என் பக்கத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்? 1
20நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; 1 நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும். 1
21நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; 1 என் வாழ்க்கையை வெறுப்பேன். 1
22ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; 1 சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார். 1
23வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது, 1 அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து சிரிக்கிறார். 1
24உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; 1 அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; 1 அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், வேறு யார் இதைச் செய்கிறார். 1
25என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது; 1 அவைகள் நன்மையைப் பார்க்காமல் பறந்துபோகும். 1
26அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும், 1 இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது. 1
27என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, 1 திடன்கொள்வேன் என்று சொன்னால், 1
28என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; 1 என்னைக் குற்றமில்லாதவனாக நினைக்கமாட்டீர் என்று அறிவேன். 1
29நான் பொல்லாதவனாயிருந்தால், 1 வீணாகப் போராடவேண்டியது என்ன? 1
30நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, 1 என் கைகளை சோப்பினால் சுத்தம்செய்தாலும், 1
31நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். 1 அப்பொழுது என் உடையே என்னை அருவருக்கும். 1
32நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், 1 நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், 1 அவர் என்னைப்போல மனிதன் அல்லவே. 1
33எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே. 1
34அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; 1 அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக. 1
35அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; 1 இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.