Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 24

1சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, 1 அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன? 1

2சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி, 1 மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள். 1

3தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், 1 விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். 1

4தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு, 1 எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள். 1

5இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; 1 வனாந்திரப் பகுதிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும். 1

6துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து, 1 அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள். 1

7குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், 1 உடையில்லாமல் இரவுதங்கி, 1

8மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள். 1

9அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, 1 தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள். 1

10அவனை உடையில்லாமல் நடக்கவும், 1 பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும், 1

11தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், 1 தாகமுள்ளவர்களாக ஆலையாட்டவும் செய்கிறார்கள். 1

12ஊரில் மனிதர் தவிக்கிறார்கள், 1 குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; 1 என்றாலும், தேவன் அவர்கள் விண்ணப்பத்தைக் கவனிக்கிறதில்லை. 1

13அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்; 1 அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், 1 அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள். 1

14கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, 1 ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று, 1 இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான். 1

15விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து: 1 என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான். 1

16அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்; 1 அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள். 1

17விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; 1 அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான். 1

18நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்; 1 தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், 1 அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை. 1

19வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; 1 அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். 1

20அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; 1 புழு திருப்தியாக அவனைத் தின்னும்; 1 அவன் அதன்பின்பு நினைக்கப்படுவதில்லை; 1 அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும். 1

21பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, 1 விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான். 1

22தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்; 1 அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை. 1

23தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், 1 அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்; 1 ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது. 1

24அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, 1 பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு, 1 மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; 1 கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள். 1

25அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, 1 என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.

← Job 23Read In The App, Free →Job 25 →

Study Job 24

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142