Job 27
1யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: 1
2“என் சுவாசம் என்னிலும், 1 தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை, 1
3என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; 1 என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று, 1
4என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், 1 என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 1
5நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; 1 என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன். 1
6என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்; 1 அதை நான் விட்டுவிடமாட்டேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இருதயம் என்னை நிந்திக்காது. 1
7என் பகைவன் ஆகாதவனைப்போலவும், 1 எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக. 1
8அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், 1 தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது + 27:8 அக்கிரமக்காரனுக்கும் தேவன் முடிவுண்டாக்குகிறார் , 1 அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன? 1
9ஆபத்து அவன்மேல் வரும்போது, 1 தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ? 1
10அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? 1 அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ? 1
11தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; 1 சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன். 1
12இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? 1
13பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், 1 கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில், 1
14அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்; 1 அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை. 1
15அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; 1 அவர்களுடைய விதவைகளும் + 27:15 அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை. 1
16அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், 1 மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும், 1
17அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, 1 குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான். 1
18அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், 1 காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும். 1
19அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, 1 ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும். 1
20வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; 1 இரவுநேரத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும். 1
21கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; 1 அது அவனை அவனுடைய இடத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும். 1
22அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான் 1 ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;. 1
23மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து, 1 அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.