Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 38

1அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக: 1

2“அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? 1

3இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்; 1 நான் உன்னைக் கேட்பேன்; 1 நீ எனக்குப் பதில் சொல் 1

4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? 1 நீ அறிவாளியானால் அதைச் சொல். 1

5அதற்கு அளவு குறித்தவர் யார்? 1 அதின்மேல் நூல்போட்டவர் யார்? 1 இதை நீ அறிந்திருந்தால் சொல். 1

6அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? 1 அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? 1

7அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, 1 தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே. 1

8கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, 1 அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? 1

9மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், 1

10நான் அதற்கு எல்லையைக் குறித்து, 1 அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: 1

11இதுவரை வா, மீறி வராதே; 1 உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? 1

12தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக, 1 அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க, 1

13உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து, 1 சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? 1

14பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்; 1 அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும். 1

15துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; 1 மேட்டிமையான கை முறிக்கப்படும்.

16நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? 1

17மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? 1 மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? 1

18நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? 1 இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல். 1

19வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே? 1 இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே? 1

20அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? 1 அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? 1

21நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? 1 உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ? 1

22உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? 1 கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ? 1

23ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும், 1 பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன். 1

24வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே? 1

25பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, 1 இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு, 1

26பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும், 1 மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து, 1

27வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், 1 இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? 1

28மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்? 1

29உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? 1 ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்? 1

30தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து, 1 ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே. 1

31அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ? 1 அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ? 1

32நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ? 1 துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? 1

33வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ? 1 அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ? 1

34ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று 1 உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ? 1

35நீ மின்னல்களை வரவழைத்து, 1 அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, 1 இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ? 1

36மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்? 1 உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்? 1

37ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்? 1

38தூசியானது பரவலாகவும், 1 மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், 1 வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்? 1

39நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி, 1

40சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது, 1 அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ? 1

41காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, 1 ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, 1 அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?

← Job 37Read In The App, Free →Job 39 →

Study Job 38

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142