Job 34
1பின்னும் எலிகூ மறுமொழியாக: 1
2“ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; 1 அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள். 1
3வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, 1 காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும். 1
4நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; 1 நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக. 1
5யோபு: நான் நீதிமான்; 1 தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும், 1
6நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; 1 மீறுதல் இல்லாதிருந்தும், 1 அம்பினால் எனக்கு இருந்த காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே. 1
7யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து, 1
8அக்கிரமக்காரருடன் சேர்ந்துகொண்டு, 1 துன்மார்க்கருடன் சுற்றுகிறவன் யார்? 1
9எப்படியென்றால், தேவன்மேல் அன்பு வைக்கிறது 1 மனிதனுக்குப் பயன் அல்ல என்றாரே. 1
10ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 அநீதி தேவனுக்கும், 1 சர்வவல்லமையுள்ள தேவனுக்கும் தூரமாயிருக்கிறது. 1
11மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ப அவனுக்குச் சரிக்கட்டி, 1 அவனவன் நடக்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குப் பலனளிக்கிறார். 1
12தேவன் அநியாயம் செய்யாமலும், 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே. 1
13பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? 1 உலகம் முழுவதையும் ஒழுங்குபடுத்தினவர் யார்? 1
14அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால், 1 அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார். 1
15அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும், 1 மனிதன் மண்ணுக்குத் திரும்புவான். 1
16உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், 1 என் வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும். 1
17நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ? 1 மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ? 1
18ஒரு ராஜாவைப் பார்த்து, 1 நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, 1 நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்ல முடியுமோ? 1
19இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும், 1 ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி 1 இப்படிச் சொல்லலாமா? 1 இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே. 1
20இப்படிப்பட்டவர்கள் உடனே இறப்பார்கள்; 1 மக்கள் நடுஇரவில் கலங்கி இறந்துபோவார்கள்; 1 பார்க்காத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள். 1
21அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; 1 அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். 1
22அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை, 1 மரணஇருளுமில்லை. 1
23மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு 1 அவர் அவன்மேல் அதிகமானதொன்றையும் சுமத்தமாட்டார். 1
24ஆராய்ந்து முடியாதவிதத்தில், 1 நியாயமாக அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, 1 வேறு மனிதரை அவர்கள் இடத்திலே நிறுத்துகிறார். 1
25அவர்களின் செயல்களை அவர் அறிந்தவர் என்பதினால், 1 அவர்கள் நசுங்கிப்போகும் அளவுக்கு இரவுநேரத்தில் அவர்களை அழித்துப்போடுகிறார். 1
26அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி 1 அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனதினாலும், 1
27எளியவர்களின் வேண்டுதல் அவரிடத்தில் சேரவைத்ததினாலும், 1 சிறுமையானவனுடைய வேண்டுதலை கேட்கிற அவர், 1
28எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார். 1
29மாயக்காரன் ஆளுகை செய்யாமலும், 1 மக்கள் சிக்கிக்கொள்ளாமலும், 1
30ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது, 1 அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கவைப்பான்? 1 அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்? 1
31நான் தண்டிக்கப்பட்டேன்; 1 நான் இனிப் பாவம் செய்யமாட்டேன். 1
32நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும், 1 நான் அநியாயம் செய்தேனென்றால், 1 நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லமுடியுமே. 1
33நீர் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறதினால், 1 உம்முடன் இருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ? 1 நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; 1 அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும். 1
34யோபு அறிவில்லாமல் பேசினார்; 1 அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று, 1
35புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்; 1 ஞானமுள்ள மனிதனும் எனக்குச் செவிகொடுப்பான். 1
36அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால் 1 யோபு முற்றும்முடிய சோதிக்கப்படவேண்டியதே என் ஆசை. 1
37தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்; 1 அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, 1 தேவனுக்கு விரோதமாகத் தம்முடைய வார்த்தைகளை அதிகமாகப் பேசினார்” என்றான்.