Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 17

1என் ஆவி உடைகிறது + 17:1 என் ஆவி நொறுங்கி விட்டது., என் ஆயுசு நாட்கள் முடிகிறது; 1 கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது. 1

2கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? 1 அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது. 1

3தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு, 1 எனக்காகப் பிணைக்கப்படுவீராக; 1 வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்? 1

4நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்; 1 ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர். 1

5எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, 1 அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும். 1

6மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; 1 அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன். 1

7இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது; 1 என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது. 1

8சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; 1 குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான். 1

9நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; 1 சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான். 1

10இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்; 1 உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை. 1

11என் நாட்கள் முடிந்தது; 1 என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது. 1

12அவைகள் இரவைப் பகலாக்கியது; 1 இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது. 1

13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், 1 பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; 1 இருளில் என் படுக்கையைப் போடுவேன். 1

14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; 1 புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன். 1

15என் நம்பிக்கை இப்போது எங்கே? 1 நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்? 1

16அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; 1 அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.

← Job 16Read In The App, Free →Job 18 →

Study Job 17

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142