Job 37
1“இதினால் என் இருதயம் தத்தளித்து, 1 தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது. 1
2தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், 1 அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள். 1
3அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், 1 பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். 1
4அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி, 1 தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறச்செய்கிறார்; 1 அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது. 1
5தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்; 1 நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். 1
6அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், 1 தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: 1 பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். 1
7தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று, 1 அவர் எல்லா மனிதருடைய கைகளையும் முடக்கிப்போடுகிறார். 1
8அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, 1 தங்கள் கெபிகளில் தங்கும். 1
9தெற்கேயிருந்து சூறாவளியும், 1 வடகாற்றினால் குளிரும் வரும். 1
10தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; 1 அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும். 1
11அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, 1 மின்னலினால் மேகத்தைச் சிதறவைக்கிறார். 1
12அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், 1 அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, 1 அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியவைக்கிறார். 1
13ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், 1 ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரச்செய்கிறார். 1
14யோபே, இதற்குச் செவிகொடும்; 1 தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும். 1
15தேவன் அவைகளைத் திட்டமிட்டு, 1 தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ? 1
16மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், 1 பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும், 1
17தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, 1 உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ? 1
18செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ? 1
19அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; 1 இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம். 1
20நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ? 1 ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிக்கப்பட்டுப்போவானே. 1
21இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது, 1
22ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே; 1 தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு. 1
23சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது; 1 அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; 1 அவர் மகா நீதிபரர்; 1 அவர் ஒடுக்கமாட்டார். 1
24ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்; 1 தங்கள் மனதில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்” என்றான்.