Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 36

1பின்னும் எலிகூ: 1

2“நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்; 1 இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன். 1

3நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, 1 என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன். 1

4மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; 1 உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன். 1

5இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; 1 மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். 1

6அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்; 1 சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார். 1

7அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், 1 அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும், 1 உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார். 1

8அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, 1 உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும், 1

9அவர், அவர்களுடைய செயல்களையும், 1 அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, 1

10அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார். 1

11அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால், 1 தங்கள் நாட்களை நன்மையாகவும், 1 தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள். 1

12அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, 1 ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள். 1

13மாயமுள்ள இருதயத்தார் + 36:13 இருதயத்தில் விசுவசிக்காதவர்கள் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; 1 அவர்களை அவர் கட்டிவைக்கும்போதும் தேவனைக் கெஞ்சிக் கூப்பிடுவதில்லை. 1

14அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்; 1 இழிவானவர்களுக்குள்ளே அவர்கள் இறப்பார்கள். 1

15சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி, 1 அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் செவியைத் திறக்கிறார். 1

16அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி, 1 இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; 1 உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும். 1

17ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; 1 நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும். 1

18கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் 1 அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்; 1 அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர். 1

19உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? 1 உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே. 1

20மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும். 1

21பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்; 1 உபத்திரவத்தைவிட அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே. 1

22இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; 1 அவரைப் போல் போதிக்கிறவர் யார்? 1

23அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? 1 நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்? 1

24மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும். 1

25எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே; 1 தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது. 1

26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; 1 நாம் அவரை அறிய முடியாது; 1 அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது. 1

27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; 1 அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது. 1

28அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது. 1

29மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ? 1

30இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; 1 சமுத்திரத்தை இருளால் மூடுகிறார். 1

31அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும், 1 ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார். 1

32அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, 1 அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார். 1

33அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், 1 புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும்.

← Job 35Read In The App, Free →Job 37 →

Study Job 36

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142