Job 12
1யோபு மறுமொழியாக: 1
2“ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; 1 உங்களுடனே ஞானம் சாகும். 1
3உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; 1 உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல; 1 இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்? 1
4என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, 1 தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்; 1 உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான். 1
5ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; 1 கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும். 1
6திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு; 1 தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்கு பாதுகாப்புண்டு; 1 அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார். 1
7இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், 1 அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், 1 அவைகள் உனக்கு அறிவிக்கும். 1
8அல்லது பூமியை விசாரித்துக் கேள், 1 அது உனக்குப் போதிக்கும்; 1 சமுத்திரத்தின் மீன்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும். 1
9யெகோவாவுடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்? 1
10எல்லா உயிரினங்களின் உயிரும், 1 மாம்சமான எல்லா மனிதரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது. 1
11வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, 1 காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா? 1
12முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே. 1
13அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்? 1 அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. 1
14இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; 1 அவர் மனிதனை அடைத்தால் விடுவிக்கமுடியாது. 1
15இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்; 1 அவர் அவைகளை வரவிட்டால், பூமியைத் தலைகீழாக மாற்றும். 1
16அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; 1 மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், 1 அவர் கையின் கீழிருக்கிறார்கள். 1
17அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, 1 நியாயாதிபதிகளின் புத்தியை மயக்குகிறார். 1
18அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, 1 அவர்கள் இடுப்புகளில் துணியைக்கட்டுகிறார். 1
19அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய், 1 பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார். 1
20அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வார்த்தையை அகற்றி, 1 முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையைத் தள்ளிப்போடுகிறார். 1
21அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்; 1 பலவான்களின் வார்க்கச்சையைத் தளர்ந்துபோகச் செய்கிறார். 1
22அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, 1 மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். 1
23அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; 1 அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார். 1
24அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, 1 அவர்களை வழியில்லாத வனாந்திரத்திலே அலையச்செய்கிறார். 1
25அவர்கள் வெளிச்சமில்லாத இருளிலே தடவித்திரிகிறார்கள்; 1 வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறி அலையவைக்கிறார்.