Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 31

1என் கண்களுடன் உடன்படிக்கைசெய்த நான் 1 ஒரு கன்னிகையின்மேல் நினைவாக இருப்பதெப்படி? 1

2அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், 1 உன்னதத்திலிருந்து சர்வவல்லமையுள்ள தேவன் கொடுக்கும் பங்கும் கிடைக்குமோ? 1

3மாறுபாடானவனுக்கு ஆபத்தும், 1 அக்கிரமக்காரருக்கு தண்டனையுமல்லவோ கிடைக்கும். 1

4அவர் என் வழிகளைப் பார்த்து, 1 என் நடைகளையெல்லாம் கணக்கிடுகிறார் அல்லவோ? 1

5நான் மாயையிலே நடந்தேனோ, 1 என் கால் தவறுசெய்ய வேகமானதோ என்று, 1

6சரியான தராசிலே தேவன் என்னை நிறுத்து, 1 என் உத்தமத்தை அறிவாராக. 1

7என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், 1 என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், 1 ஏதாகிலும் ஒரு குற்றம் என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் இருந்தால், 1

8அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக; 1 என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது. 1

9என் மனம் எந்தப் பெண்ணின்மேல் மயங்கி, 1 அடுத்தவனுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால், 1

10அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; 1 வேறு மனிதர் அவள்மேல் சாய்வார்களாக. 1

11அது தவறு, அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் குற்றமாமே. 1

12அது பாதாளம்வரை எரிக்கும் 1 நெருப்பாய் என் விளைச்சல்களையெல்லாம் அழிக்கும். 1

13என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது, 1 அவர்கள் நியாயத்தை நான் அசட்டைசெய்திருந்தால், 1

14தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; 1 அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு திரும்ப என்ன பதில் சொல்லுவேன். 1

15தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டாக்கியவர் 1 அவனையும் உண்டாக்கினார் அல்லவோ? 1 ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ? 1

16ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, 1 விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து, 1

17தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், 1 நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ? 1

18என் சிறுவயதுமுதல் அவனுடைய தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னுடன் வளர்ந்தான்; 1 நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களை கைபிடித்து நடத்தினேன். 1

19ஒருவன் உடையில்லாததினால் மடிந்துபோகிறதையும், 1 ஏழைக்கு அணிய ஆடையில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது, 1

20அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால், 1 அவனுடைய இருதயம் என்னைப் புகழாதிருந்ததும், 1

21ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, 1 திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டினதும் உண்டானால், 1

22என் கை தோள்பட்டையிலிருந்து விலகி, 1 என் கையின் எலும்பு முறிந்துபோவதாக. 1

23தேவன் தண்டிப்பார் என்றும், 1 அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும், 1 எனக்குப் பயங்கரமாயிருந்தது. 1

24நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, 1 தங்கத்தைப்பார்த்து: 1 நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும், 1

25என் செல்வம் அதிகமென்றும், 1 என் கைக்கு அதிகமாக கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும், 1

26சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாகச் செல்லும்போதும், 1 நான் அதை நோக்கி: 1

27என் மனம் இரகசியமாக மயங்கி, 1 என் வாய் என் கையை முத்தம் செய்ததுண்டானால், 1

28இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; 1 அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே. 1

29என் பகைவனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, 1 பொல்லாப்பு அவனுக்கு நடந்தபோது மகிழ்ந்திருந்தேனோ? 1

30அவன் உயிருக்குச் சாபத்தைக் கொடுக்க விரும்பி, 1 வாயினால் பாவம் செய்ய நான் இடங்கொடுக்கவில்லை. 1

31அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று 1 என் கூடாரத்தின் மனிதர் சொல்லமாட்டார்களோ? 1

32அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை; 1 வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன். 1

33நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, 1 என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ? 1

34மிகுதியான என் மக்கள் கூட்டத்திற்கு நான் பயந்ததினாலாவது, 1 மக்கள் செய்யும் இகழ்ச்சி என்னை அதிர்ச்சியடையச் செய்ததினாலாவது, 1 நான் பேசாதிருந்து, வாசற்படியைவிட்டுப் புறப்படாதிருந்தேனோ? 1

35ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; 1 இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும், 1 என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு. 1

36அதை நான் என் தோளின்மேல் வைத்து, 1 எனக்குக் கிரீடமாக அணிந்துகொள்வேனே. 1

37அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து, 1 ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன். 1

38எனக்கு விரோதமாக என் சொந்த பூமி கூப்பிடுகிறதும், 1 அதின் வரப்புகள்கூட அழுகிறதும், 1

39கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு, 1 பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால், 1

40அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், 1 வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கட்டும்” என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.

← Job 30Read In The App, Free →Job 32 →

Study Job 31

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142