Job 15
1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக: 1
2ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, 1 தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி, 1
3பயனில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கம் செய்யலாமோ? 1
4நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, 1 தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறைத்துக்கொண்டீர். 1
5உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; 1 நீர் தந்திரமுள்ளவர்களின் சொல்லைத் தெரிந்துகொண்டீர். 1
6நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று முடிவு செய்கிறது; 1 உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது. 1
7மனிதரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? 1 மலைகளுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ? 1
8நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, 1 ஞானத்தை உம்மிடமாகச் சேர்த்துக்கொண்டீரோ? 1
9நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? 1 எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ? 1
10உம்முடைய தகப்பனைவிட அதிக வயதுள்ள நரைத்தோரும் மிகுந்த வயதானோரும் எங்களுக்குள் இருக்கிறார்களே. 1
11தேவன் அருளிய ஆறுதல்களும், 1 உம்முடன் சொல்லப்படுகிற மென்மையான பேச்சும் உமக்கு இழிவான காரியமாயிருக்கிறதோ? 1
12உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? 1 உம்முடைய கண்கள் கோபத்துடன் பார்க்கிறது என்ன? 1
13தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படச்செய்கிறீர். 1
14மனிதனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், 1 பெண்ணிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? 1
15இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; 1 வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. 1
16அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்? 1
17உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்; 1 நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன். 1
18ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன். 1
19அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; 1 அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை. 1
20துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; 1 பலவந்தம் செய்கிறவனுக்கு அவனுடைய வருடங்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டிருக்கிறது. 1
21பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது; 1 அவன் சமாதானமாயிருக்கும்போது பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான். 1
22இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், 1 ஒளிந்திருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான். 1
23அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; 1 இருளானநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான். 1
24இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கச்செய்து, 1 போர்வீரனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும். 1
25அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, 1 சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான். 1
26கடினக்கழுத்துடனும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களுடனும் அவருக்கு எதிராக ஓடுகிறான். 1
27அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; 1 அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது. 1
28ஆனாலும் பாழான பட்டணங்களிலும், 1 குடிபோன கற்குவியலான வீடுகளிலும் குடியிருப்பான். 1
29அவன் செல்வந்தனாவதுமில்லை, 1 அவனுடைய செல்வம் நிலைப்பதுமில்லை; 1 அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை. 1
30இருளுக்கு அவன் தப்புவதில்லை; 1 நெருப்புத்தணல் அவனுடைய கிளையைக் காய்ந்துபோகச் செய்யும்; 1 அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்; 1
31வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது; 1 நம்பினால் மாயையே அவனுடைய பலனாயிருக்கும். 1
32அது அவனுடைய நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாகப் பலிக்கும்; 1 அவனுடைய செடிகள் பச்சையாக இருப்பதில்லை. 1
33பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சைச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான். 1
34மாயக்காரரின் கூட்டம் வெறுமையாகப்போகும்; 1 லஞ்சம் வாங்கினவர்களின் கூடாரங்களை நெருப்பு எரிக்கும். 1
35அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்; 1 அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும்” என்றான்.