Job 5
1“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? 1 பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்? 1
2கோபம் மூடனைக் கொல்லும்; 1 பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும். 1
3மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு 1 உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன். 1
4அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, 1 காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள். 1
5பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; 1 பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான். 1
6தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; 1 வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை. 1
7தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, 1 மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான். 1
8ஆனாலும் நான் தேவனை நாடி, 1 என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன். 1
9ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத 1 அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1
10தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, 1 துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார். 1
11அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, 1 வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார். 1
12தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க, 1 அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார். 1
13அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; 1 தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும். 1
14அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, 1 மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள். 1
15ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், 1 பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார். 1
16அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; 1 தீமையானது தன் வாயை மூடும். 1
17இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; 1 ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். 1
18அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; 1 அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. 1
19ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; 1 ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. 1
20பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், 1 போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார். 1
21நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; 1 அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர். 1
22அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; 1 காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள். 1
23வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; 1 வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும். 1
24உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; 1 உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது 1 குறைவைக் காணமாட்டீர். 1
25உம்முடைய சந்ததி பெருகி, 1 உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். 1
26தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, 1 முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர். 1
27இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; 1 காரியம் இப்படியிருக்கிறது; 1 இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.