Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 7

1பூமியிலே பாடுபட மனிதனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? 1 அவனுடைய நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ? 1

2ஒரு வேலையாள் நிழலை விரும்பி, 1 ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல, 1

3மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி, 1 பிரச்சனையான இரவுகள் எனக்குக் குறிக்கப்பட்டது. 1

4நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? 1 இரவு எப்பொழுது முடியும் என்று சொல்லி, 1 விடியும்வரை உருண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்றுபோகிறது. 1

5என் உடல் பூச்சிகளினாலும், 1 அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; 1 என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று. 1

6என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது; 1 அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும். 1

7என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும், 1 என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும். 1

8இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; 1 உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன். 1

9மேகம் பறந்துபோகிறதுபோல, 1 பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். 1

10இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், 1 அவனுடைய இடம் இனி அவனை அறியாது. 1

11ஆகையால் நான் என் வாயை அடக்காமல், 1 என் ஆவியின் வேதனையினால் பேசி, 1 என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன். 1

12தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? 1 நான் ஒரு திமிங்கிலமோ? 1

13என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், 1 என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேன் என்றால், 1

14நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து, 1 தரிசனங்களால் எனக்கு பயமுண்டாக்குகிறீர். 1

15அதினால் என் ஆத்துமா, 1 நெருக்கப்பட்டு சாகிறதையும், 1 என் எலும்புகளுடன் உயிரோடிருக்கிறதைவிட, 1 மரணத்தையும் விரும்புகிறது. 1

16இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்; 1 எந்நாளும் உயிரோடிருக்க விரும்பமாட்டேன், என்னை விட்டுவிடும்; 1 என் நாட்கள் மாயைதானே. 1

17மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும், 1 அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், 1

18காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், 1 நிமிடந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், 1 அவன் எம்மாத்திரம்? 1

19நான் என் உமிழ்நீரை விழுங்காமல் எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், 1 என்னை விடாமலும் இருப்பீர். 1

20மனிதர்களைக் காப்பவரே, 1 பாவம்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? 1 நான் எனக்குத்தானே பாரமாயில்லாமல், 1 நீர் என்னை உமக்குக் குறியாக வைத்தது என்ன? 1

21என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? 1 இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; 1 விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இருக்கமாட்டேன்” என்றான்.

← Job 6Read In The App, Free →Job 8 →

Study Job 7

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142