Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 8

1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: 1

2“நீர் எதுவரைக்கும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? 1 எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்? 1

3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ? 1

4உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும் 1 அவர்களுடைய பாவத்தின் தண்டனைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும், 1

5நீர் தேவனை ஏற்கனவே தேடி, 1 சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்து, 1

6சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், 1 அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார். 1

7உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும், 1 உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். 1

8ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, 1 அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும். 1

9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; 1 பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது. 1

10அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து, 1 தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ? 1

11சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? 1 தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ? 1

12அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, 1 அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைவிட சீக்கிரமாக வாடிப்போகும் அல்லவோ? 1

13தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; 1 மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும். 1

14அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய், 1 அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும். 1

15ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால், 1 அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது. 1

16வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, 1 அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்; 1

17அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, 1 கற்பாறையை நாடும். 1

18அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், 1 அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும். 1

19இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; 1 ஆனாலும் வேறே ஆட்கள் அந்த இடத்திலிருந்து எழும்புவார்கள். 1

20இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, 1 பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை. 1

21இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும், 1 உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார். 1

22உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; 1 துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும்” என்றான்.

← Job 7Read In The App, Free →Job 9 →

Study Job 8

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142