Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 21

1யோபு மறுமொழியாக: 1

2“என் வசனத்தைக் கவனமாகக் கேளுங்கள்; 1 இது நீங்கள் என்னை ஆறுதல் செய்வதுபோல இருக்கும். 1

3நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; 1 நான் பேசினபின்பு கேலிசெய்யுங்கள். 1

4நான் மனிதனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? 1 அப்படியானாலும் என் ஆவி வேதனைப்படாதிருக்குமா? 1

5என்னைக் கவனித்துப்பாருங்கள், 1 அப்பொழுது நீங்கள் ஆச்சரியப்பட்டு, 1 உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள். 1

6இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்; 1 நடுக்கம் என் சரீரத்தைப் பிடிக்கும். 1

7துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, 1 ஏன் வல்லவராகவேண்டும்? 1

8அவர்களுடன் அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், 1 அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள். 1

9அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரமாக இருக்கும்; 1 தேவனுடைய தண்டனை அவர்கள்மேல் வருகிறதில்லை. 1

10அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; 1 அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது. 1

11அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; 1 அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள். 1

12அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, 1 கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள். 1

13அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, 1 + 21:13 சமாதானம்ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். 1

14அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், 1 உம்முடைய வழிகளை அறிய விரும்பவில்லை; 1

15சர்வவல்லமையுள்ள தேவனை நாம் ஆராதிக்க அவர் யார்? 1 அவரை நோக்கி ஜெபம் செய்வதினால் நமக்கு பலன் என்ன என்கிறார்கள். 1

16ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிருக்காது; 1 துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. 1

17எத்தனை வேகமாக துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; 1 அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது, 1 அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும். 1

18அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும், 1 பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள். 1

19தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; 1 அவன் உணர்வடையும்விதத்தில் அதை அவனுக்குப் பலிக்கச் செய்கிறார். 1

20அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், 1 சர்வவல்லமையுள்ள தேவனை கடுங்கோபத்தை குடிப்பான். 1

21அவனுடைய மாதங்களின் தொகை குறைக்கப்படும்போது, 1 அவனுக்குப் பிறகு அவனுடைய வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன? 1

22உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்? 1

23ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான். 1

24அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது, 1 அவனுடைய எலும்புகளில் ஊன் உறுதியாயிருக்கிறது. 1

25வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்துடன் சாப்பிடாமல், 1 மனவேதனையுடன் இறக்கிறான். 1

26இருவரும் சமமாக மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; 1 புழுக்கள் அவர்களை மூடும். 1

27இதோ, நான் உங்கள் நினைவுகளையும், 1 நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாகக் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன். 1

28பிரபுவின் வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? 1 என்று சொல்லுகிறீர்கள். 1

29வழியிலே நடந்து போகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, 1 அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா? 1

30துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்; 1 அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான். 1

31அவனுடைய வழியை அவனுடைய முகத்திற்கு முன்பாக எடுத்துக் காட்டுகிறவன் யார்? 1 அவனுடைய செய்கைக்குத் தக்க பலனை அவனுக்கு ஈடுகட்டுகிறவன் யார்? 1

32அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; 1 அவனுடைய கல்லறை காக்கப்பட்டிருக்கும். 1

33பள்ளத்தாக்கின் புழுதி மண்கள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; 1 அவனுக்கு முன்னாக அனேக மக்கள் போனதுபோல, 1 அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்திற்குச் செல்லுவார்கள். 1

34நீங்கள் வீணாக எனக்கு ஆறுதலை சொல்லுகிறது என்ன? 1 உங்கள் மறுமொழிகளில் முழுவதும் பொய் இருக்கிறது” என்றான்.

← Job 20Read In The App, Free →Job 22 →

Study Job 21

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142