Job 6
1யோபு மறுமொழியாக: 1
2“என் பிரச்சனைகளும், 1 துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும். 1
3அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; 1 ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. 1
4சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; 1 அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; 1 தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் 1 எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது. 1
5புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? 1 தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? 1
6ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ? 1 முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ? 1
7உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; 1 அவைகள் வெறுப்பான உணவுபோல இருக்கிறது. 1
8ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, 1 நான் விரும்புவதை தேவன் எனக்குத் தந்து, 1
9தேவன் என்னை நொறுக்க விரும்பி, 1 தம்முடைய கையை நீட்டி என்னை கொன்றுபோட்டால் நலமாயிருக்கும். 1
10அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; 1 அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால் 1 உணர்வில்லாமல் இருப்பேன்; 1 பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, 1 அவர் என்னைக் கைவிடமாட்டார். 1
11நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? 1 என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது? 1
12என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ? 1
13எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? 1 உதவி என்னைவிட்டு நீங்கிவிட்டதே. 1
14உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்; 1 அவனோ சர்வவல்லமையுள்ள தேவனுக்குப் பயப்படாமல் போகிறான். 1
15என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள். 1
16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், 1 அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி, 1
17வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி, 1 சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன. 1
18அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; 1 அவைகள் வீணாக பரவி ஒன்றுமில்லாமற்போகும். 1
19தேமாவின் பயணக்காரர் தேடி, 1 சேபாவின் பயணக்கூட்டங்கள் 1 அவைகள்மேல் நம்பிக்கை வைத்து, 1
20தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; 1 அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள். 1
21அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; 1 என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள். 1
22எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும், 1 உங்கள் செல்வத்திலிருந்து எனக்கு ஏதாவது பணம் கொடுங்கள் என்றும்; 1
23அல்லது சத்துருவின் கைக்கு என்னை காப்பாற்றுங்கள், 1 கொடியவரின் கைக்கு என்னை தப்புவித்து காப்பாற்றிவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ? 1
24எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; 1 நான் எதிலே தவறுசெய்தேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். 1
25உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? 1 உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன? 1
26கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, 1 நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ? 1
27இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, 1 உங்கள் நண்பனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள். 1
28இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; 1 அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும். 1
29நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்; 1 அநீதி காணப்படாதிருக்கும்; 1 திரும்ப சிந்தியுங்கள் என் நீதி அதிலே வெளிப்படும். 1
30என் நாவிலே அநீதி உண்டோ? 1 என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?