Job 22
1அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக: 1
2“ஒரு மனிதன் விவேகியாயிருந்து, 1 தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ? 1
3நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? 1 நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது 1 அவருக்கு ஆதாயமாயிருக்குமோ? 1
4அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, 1 உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ? 1
5உம்முடைய பொல்லாப்பு பெரியதும், 1 உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ? 1
6காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, 1 ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். 1
7மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், 1 பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர். 1
8பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; 1 கனவான் அதில் குடியேறினான். 1
9விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; 1 தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது. 1
10ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; 1 திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது. 1
11நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, 1 பெருவெள்ளம் உம்மை மூடுகிறது. 1
12தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? 1 நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது. 1
13நீர்: தேவன் எப்படி அறிவார், 1 இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ? 1
14அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; 1 வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர். 1
15அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ? 1
16காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; 1 அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. 1
17தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், 1 அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், 1 சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள். 1
18ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. 1
19எங்கள் நிலைமை அழியாமல், 1 அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள். 1
20குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். 1
21நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; 1 அதினால் உமக்கு நன்மைவரும். 1
22அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, 1 அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன். 1
23நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், 1 திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர். 1
24அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், 1 ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர். 1
25அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார். 1
26அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர். 1
27நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; 1 அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர். 1
28நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; 1 உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும். 1
29மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, 1 தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள். 1
30குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; 1 உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான்.