Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 23

1யோபு மறுமொழியாக: 1

2“இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது; 1 என் தவிப்பைவிட என் வாதை கடினமானது. 1

3நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; 1 அப்பொழுது நான் அவர் இருக்கைக்கு முன்பாக வந்து சேர்ந்து, 1

4என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து, 1 காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன். 1

5அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, 1 அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன். 1

6அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ? 1 அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார். 1

7அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்; 1 அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் விலக்கிக் காப்பாற்றிக்கொள்வேன். 1

8இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; 1 பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை. 1

9இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை; 1 வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார். 1

10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; 1 அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். 1

11என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; 1 அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன். 1

12அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; 1 அவருடைய வாயின் வார்த்தைகளை 1 எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன். 1

13அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; 1 அவரைத் திருப்பத்தக்கவர் யார்? 1 அவருடைய விருப்பத்தின்படியெல்லாம் செய்வார். 1

14எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; 1 இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு. 1

15ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; 1 நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன். 1

16தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்; 1 சர்வவல்லமையுள்ள தேவன் என்னைக் கலங்கச் செய்தார். 1

17இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும், 1 இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.

← Job 22Read In The App, Free →Job 24 →

Study Job 23

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142