Job 39
1“வரையாடுகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ? 1 மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ? 1
2அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, 1 அவைகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ? 1
3அவைகள் வேதனையுடன் குனிந்து தங்கள் குட்டிகளைப் பெற்று, 1 தங்கள் வேதனைகளை நீக்கிவிடும். 1
4அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, 1 அவைகளிடத்தில் திரும்ப வராமல் போய்விடும். 1
5காட்டுக்கழுதையைத் தன் விருப்பத்திற்கு சுற்றித்திரிய வைத்தவர் யார்? 1 அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்? 1
6அதற்கு நான் வனாந்திரத்தை வீடாகவும், 1 உவர்நிலத்தை தங்கும் இடமாகவும் கொடுத்தேன். 1
7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்செய்து, 1 ஓட்டுகிறவனுடைய சத்தத்தை மதிக்கிறதில்லை. 1
8அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, 1 எல்லாவிதப் பச்சைத் தாவரங்களையும் தேடித்திரியும். 1
9காண்டாமிருகம் உன்னிடத்தில் வேலை செய்ய சம்மதிக்குமோ? 1 அது உன் பண்ணையில் இரவு தங்குமோ? 1
10வயலில் உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரில் பூட்டுவாயோ? 1 அது உனக்கு இசைந்து போரடிக்குமோ? 1
11அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ? 1
12உன் தானியத்தை அது உன்வீட்டில் கொண்டுவந்து, 1 உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ? 1
13தீக்குருவிகள் தங்கள் இறக்கைகளை அடித்து ஓடுகிற ஓட்டம், 1 நாரை தன் இறக்கைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ? 1
14அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய், 1
15காலால் மிதிபட்டு உடைந்துபோகும் என்பதையும், 1 காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை. 1
16அது தன் குஞ்சுகள் தன்னுடையது அல்ல என்பதுபோல 1 அவைகளைப் பாதுகாக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; 1 அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாததினால் அது பட்ட வருத்தம் வீணாகும். 1
17தேவன் அதற்குப் புத்தியைக் கொடுக்காமல், 1 ஞானத்தை விலக்கிவைத்தார். 1
18அது இறக்கை விரித்து எழும்பும்போது, 1 குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் செய்யும். 1
19குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? 1 அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ? 1
20ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? 1 அதினுடைய மூக்கின் கனைப்பு பயங்கரமாயிருக்கிறது. 1
21அது தரையிலே உதைத்து, 1 தன் பலத்தில் மகிழ்ந்து, ஆயுதங்களை அணிந்தவருக்கு எதிராகப் புறப்படும். 1
22அது கலங்காமலும், பட்டயத்திற்குப் பின்வாங்காமலுமிருந்து, 1 பயப்படுதலை புறக்கணிக்கும். 1
23அம்புகள் வைக்கும் பையும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது, 1
24கர்வமும் மூர்க்கமும்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல நினைத்து, 1 எக்காளத்தின் சத்தத்திற்கு பயப்படாமல் பாயும். 1
25எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; 1 யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், 1 சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம்பிடிக்கும். 1
26உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, 1 தெற்கு திசைக்கு நேராகத் தன் இறக்கைகளை விரிக்கிறதோ? 1
27உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, 1 உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ? 1
28அது கன்மலையிலும், கன்மலையின் உச்சியிலும், 1 பாதுகாப்பான இடத்திலும் தங்கியிருக்கும். 1
29அங்கேயிருந்து இரையை நோக்கும்; 1 அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும். 1
30அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; 1 பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும்” என்றார்.