Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 18

1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: 1

2“நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? 1 புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும். 1

3நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, 1 உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்? 1

4கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? 1 கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ? 1

5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; 1 அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். 1

6அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; 1 அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும். 1

7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும். 1

8அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, 1 வலையின் சிக்கலிலே நடக்கிறான். 1

9கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; 1 பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள். + 18:9 அவர்கள் அவர்களை ஜெயித்தார்கள் 1

10அவனுக்காகச் சுருக்கு தரையிலும், 1 அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது. 1

11சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, 1 அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும். 1

12அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; 1 அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும். 1

13அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; 1 பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும். 1

14அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; 1 அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும். 1

15அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், 1 பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்; 1 கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும். 1

16கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; 1 மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும். 1

17அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், 1 வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும். 1

18அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, 1 பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான். 1

19அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; 1 அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை. 1

20அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல, 1 கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள். + 18:20 மேற்கிலிருந்த மக்கள் 1

21அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; 1 தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.

← Job 17Read In The App, Free →Job 19 →

Study Job 18

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142