Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 10

1யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? 1 துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? 1

2துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் 1 ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்; 1 அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். 1

3துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான், 1 பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான். 1

4துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்; 1 அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே. 1

5அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; 1 உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன; 1 தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான். 1

6நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை 1 என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். 1

7அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், 1 கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது; 1 அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. 1

8கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து, 1 மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; 1 திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன. 1

9தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்; 1 ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான். 1

10திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான். 1

11தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து, 1 எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்; 1 தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான். 1

12யெகோவாவே, எழுந்தருளும்; 1 தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; 1 ஏழைகளை மறக்காமலிரும். 1

13துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து, 1 நீர் கேட்டு விசாரிப்பதில்லை; 1 என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்? 1

14அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும், 1 துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே; 1 நீர் பதிலளிப்பீர்; 1 ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; 1 திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. 1

15துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; 1 அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும். 1

16யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்; 1 அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள். 1

17யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; 1 அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர். 1

18மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல், 1 தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் 1 ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய 1 உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.

← Psalms 9Read In The App, Free →Psalms 11 →

Study Psalms 10

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150