Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 65

1தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; 1 பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும். 1

2ஜெபத்தைக் கேட்கிறவரே, மனிதர்கள் அனைவரும் உம்மிடத்தில் வருவார்கள். 1

3அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; 1 தேவனே நீரோ எங்களுடைய மீறுதல்களை மன்னிக்கிறீர். 1

4உம்முடைய ஆலயமுற்றங்களில் குடியிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; 1 உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். 1

5பூமியின் கடைசி எல்லைகளிலும் 1 தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற 1 எங்களுடைய இரட்சிப்பின் தேவனே, 1 நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர். 1

6வல்லமையைக் கட்டிக்கொண்டு, 1 உம்முடைய பலத்தினால் மலைகளை உறுதிப்படுத்தி, 1

7கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், 1 மக்களின் குழப்பத்தையும் அமர்த்துகிறீர். 1

8பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்; 1 காலையையும், மாலையையும் சந்தோஷப்படச்செய்கிறீர். 1

9தேவனே நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; 1 தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; 1 இப்படி நீர் அதைத் திருத்தி, 1 அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். 1

10அதின் வரப்புகள் தணியும்படி அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, 1 அதை மழைகளால் கரையச்செய்து, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர். 1

11வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; 1 உமது பாதைகள் நெய்யாகப் பொழிகிறது. 1

12வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது; 1 மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது. 1

13மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; 1 பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; 1 அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.

← Psalms 64Read In The App, Free →Psalms 66 →

Study Psalms 65

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150