Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 52

1பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? 1 தேவனுடைய கிருபை எந்நாளும் உள்ளது. 1

2நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய், 1 கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது. 1

3நன்மையைவிட தீமையையும், 1 யாதார்த்தம் பேசுகிறதைவிட பொய்யையும் விரும்புகிறாய். (சேலா) 1

4கபடமுள்ள நாவே, அழிக்கும் எல்லா வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்; 1

5தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்; 1 அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி, 1 நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா) 1

6நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து: 1

7இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல், 1 தன்னுடைய செல்வப்பெருக்கத்தை நம்பி, 1 தன்னுடைய தீமையில் பலத்துக்கொண்ட மனிதன் இவன்தான் என்பார்கள். 1

8நானோ தேவனுடைய ஆலயத்தில் 1 பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், 1 தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். 1

9நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, 1 உமது பெயருக்குக் காத்திருப்பேன்; 1 உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாக இருக்கிறது.

← Psalms 51Read In The App, Free →Psalms 53 →

Study Psalms 52

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150