Psalms 149
1அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 1 பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும். 1
2இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், 1 மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும். 1
3அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, 1 தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும். 1
4யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; 1 சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். 1
5பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, 1 தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். 1
6தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், 1
7அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், 1 அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், 1 எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும், 1
8அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், 1 அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும். 1
9இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். 1 அல்லேலூயா.