Psalms 17
1யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும், 1 என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்; 1 பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் 1 என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும். 1
2உம்முடைய சந்நிதியிலிருந்து என்னுடைய நியாயம் வெளிப்படுவதாக; 1 உம்முடைய கண்கள் நியாயமானவைகளைப் பார்ப்பதாக. 1
3நீர் என்னுடைய இருதயத்தைப் பரிசோதித்து, 1 இரவுநேரத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் 1 ஒன்றும் காணாமலிருக்கிறீர்; + 17:3 மற்றவர்களைப் போல தீமை பேசுகிறதில்லை.என்னுடைய வாய் மீறாதபடி தீர்மானம் செய்திருக்கிறேன். 1
4மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே 1 தீயவர்களுடைய பாதைகளுக்கு விலக்கி என்னைக் காத்துக்கொள்ளுகிறேன். 1
5என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. 1 என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை. 1
6தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், 1 ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, 1 என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும். 1
7உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து 1 உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே! 1 உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும். 1
8கண்மணியைப்போல் என்னைக் காத்து. 1
9என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும், 1 என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக, 1 உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும். 1
10அவர்கள் கொழுத்துப்போய், 1 தங்களுடைய வாயினால் கர்வமாக பேசுகிறார்கள். 1
11நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; 1 எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றன. 1
12பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும், 1 மறைவிடங்களில் ஒளிந்திருக்கிற பாலசிங்கத்திற்கும் ஒப்பாக இருக்கிறார்கள். 1
13யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால் 1 என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும். 1
14யெகோவாவே, மனிதருடைய கைக்கும், 1 இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் 1 உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; 1 அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; 1 அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, 1 தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். 1
15நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்; 1 நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.