Psalms 78
1என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; 1 என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள். 1
2என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; 1 ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன். 1
3அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; 1 எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். 1
4பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், 1 யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும், 1 அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். 1
5அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, 1 இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி, 1 அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி 1 நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். 1
6இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, 1 அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; 1
7தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து, 1 தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்; 1
8இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், 1 தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய 1 தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார். 1
9ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள் 1 யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள். 1
10அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், 1 அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும், 1
11அவருடைய செயல்களையும், 1 அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். 1
12அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, 1 அவர் அதிசயமானவைகளைச் செய்தார். 1
13கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, 1 தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார். 1
14பகலிலே மேகத்தினாலும், 1 இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். 1
15பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து, 1 மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார். 1
16கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து, 1 தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார். 1
17என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, 1 பாலைவனத்திலே உன்னதமான தேவனுக்குக் கோபம் மூட்டினார்கள். 1
18தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு, 1 தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். 1
19அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி: 1 தேவன் பாலைவனத்திலே உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ? 1
20இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது; 1 அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ? 1 தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள். 1
21ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; 1 அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும், 1 அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால், 1
22யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது; 1 இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது. 1
23அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, 1 வானத்தின் கதவுகளைத் திறந்து, 1
24மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து, 1 வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். 1
25தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்; 1 அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார். 1
26வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, 1 தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து, 1
27இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து, 1
28அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார். 1
29அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; 1 அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார். 1
30அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை; 1 அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே.
31தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, 1 அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார். 1
32இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், 1 பின்னும் பாவஞ்செய்தார்கள். 1
33ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், 1 அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார். 1
34அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, 1 அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி; 1
35தேவன் தங்களுடைய கன்மலையென்றும், 1 உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள். 1
36ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி, 1 தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள். 1
37அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; 1 அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை. 1
38அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; 1 அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், 1 அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார். 1
39அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார். 1
40எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, 1 பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள். 1
41அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, 1 இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள். 1
42அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள். 1
43அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், 1 சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார். 1
44அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய 1 ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார். 1
45அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், 1 அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். 1
46அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், 1 அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார். 1
47கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், 1 ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து, 1
48அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், 1 அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார். 1
49தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், 1 பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். 1
50அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், 1 அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். 1
51எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், 1 காமின் + 78:51 காமின் எகிப்து தேசத்தை குறிக்கிறது. காம் நோவாவின் குமாரன், எகிப்தின் மூதாதையர் என்று ஆதியாகமம் 10:6 ல் சொல்லியிருக்கிறது கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து; 1
52தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, 1 அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்; 1
53அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்; 1 அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது. 1
54அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், 1 தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து, 1
55அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு, 1 தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, 1 அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார். 1
56ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, 1 அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய், 1
57தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி, 1 துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு, 1
58தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, 1 தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள். 1
59தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து, 1 இஸ்ரவேலை மிகவும் வெறுத்து, 1
60தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள + 78:60 சீலொவோம் எருசலேமின் வடக்கே 32 கிமீ தூரத்தில் இருக்கிறது. இஸ்ரவேலின் ஆரம்ப நாட்களில் தேவனுடைய உடன்பட்டிக்கைபெட்டி சீலோவோமில் வைக்கப்பட்டிருந்தது. வாசஸ்தலத்தை விட்டுவிலகி, 1
61தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து, 1
62தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார். 1
63அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது, 1 அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள். 1
64அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், 1 அவர்களுடைய விதவைகள் அழவில்லை. 1
65அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும், 1 திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து, 1
66தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து, 1 அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார். 1
67அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; 1 எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல், 1
68யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார். 1
69தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், 1 என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். 1
70தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, 1 ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். 1
71கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, 1 தம்முடைய மக்களாகிய யாக்கோபையும் 1 தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, 1 அழைத்துக்கொண்டுவந்தார். 1
72இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, 1 தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.