Psalms 6
1யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், 1 உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும். 1
2என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, 1 நான் பெலனில்லாமல் போனேன்; 1 என்னைக் குணமாக்கும் யெகோவாவே, 1 என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. 1
3என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, 1 எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர். 1
4திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; 1 உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். 1
5மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, 1 பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 1
6என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; 1 இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, 1 என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். 1
7துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, 1 என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது. 1
8அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; 1 யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார். 1
9யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; 1 யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். 1
10என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; 1 அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.