Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 36

1துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; 1 அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை. 1

2அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, 1 தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான். 1

3அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; 1 புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான். 1

4அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, 1 நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, 1 பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான். 1

5யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; 1 உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது. 1

6உமது நீதி மகத்தான மலைகள் போலவும், 1 உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; 1 யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். 1

7தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! 1 அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். 1

8உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; 1 உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். 1

9வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; 1 உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். 1

10உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், 1 செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் 1 உமது நீதியையும் பாராட்டியருளும். 1

11பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், 1 துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக. 1

12அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; 1 எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.

← Psalms 35Read In The App, Free →Psalms 37 →

Study Psalms 36

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150