Psalms 2
1தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? 1 மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்? 1
2யெகோவாவுக்கு விரோதமாகவும், 1 அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும், 1 பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, 1 அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து: 1
3அவர்களுடைய கட்டுகளை அறுத்து, 1 அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள். 1
4பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; 1 ஆண்டவர் அவர்களை இகழுவார். 1
5அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார். 1 தமது கடுங்கோபத்திலே அவர்களைக் கலங்கச்செய்வார். 1
6நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார். 1
7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; 1 யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன், 1 இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்; 1
8என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும், 1 பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; 1
9இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, 1 குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். 1
10இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், 1 பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள். 1
11பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள், 1 நடுக்கத்துடனே மகிழ்ந்திருங்கள். 1
12தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு, 1 தேவனை முத்தம்செய்யுங்கள்; 1 கொஞ்சக்காலத்திலே தேவனுடைய கோபம் பற்றியெரியும்; 1 அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.