Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 85

1யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, 1 யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர். 1

2உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, 1 அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா) 1

3உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, 1 உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர். 1

4எங்கள் இரட்சிப்பின் தேவனே, 1 நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், 1 எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும். 1

5என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ? 1 தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ? 1

6உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி 1 நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ? 1

7யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, 1 உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும். 1

8கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்; 1 அவர் தம்முடைய மக்களுக்கும் 1 தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; 1 அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக. 1

9நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி, 1 அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. 1

10கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், 1 நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். 1

11சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், 1 நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும். 1

12யெகோவா நன்மையானதைத் தருவார்; 1 நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும். 1

13நீதி அவருக்கு முன்னாகச் சென்று, 1 அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.

← Psalms 84Read In The App, Free →Psalms 86 →

Study Psalms 85

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150