Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 95

1யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி, 1 நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள். 1

2துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, 1 பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம். 1

3யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார். 1

4பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது; 1 மலைகளின் உயரங்களும் அவருடையவைகள். 1

5கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; 1 காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது. 1

6நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக 1 நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள். 1

7அவர் நம்முடைய தேவன்; 1 நாம் அவர் மேய்ச்சலின் மக்களும், 1 அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே. 1

8இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால், 1 வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, 1 உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள். 1

9அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, 1 என்னைப் பரீட்சை பார்த்து, என்னுடைய செயல்களையும் கண்டார்கள். 1

10நாற்பது வருடங்களாக நான் அந்தச் சந்ததியின்மேல் கோபமாக இருந்து, 1 அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், 1 என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி, 1

11என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் நுழைவதில்லையென்று, 1 என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

← Psalms 94Read In The App, Free →Psalms 96 →

Study Psalms 95

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150