Psalms 83
1தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம், 1 பேசாமல் இருக்கவேண்டாம்; தேவனே, சும்மாயிருக்க வேண்டாம். 1
2இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து, 1 உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள். 1
3உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து, 1 உமது மறைவில் இருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்கிறார்கள். 1
4அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், 1 இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, 1 அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள். 1
5இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும், 1 இஸ்மவேலர்களும், மோவாபியர்களும், ஆகாரியர்களும், 1
6கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும், 1 தீருவின் குடிமக்களோடுகூடிய பெலிஸ்தர்களும், 1
7ஒரே மனதோடு முடிவெடுத்து ஆலோசனைசெய்து, 1 உமக்கு விரோதமாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். 1
8அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து, 1 லோத்தின் சந்ததிகளுக்கு பலமானார்கள். (சேலா) 1
9மீதியானியர்களுக்குச் செய்தது போலவும், 1 கீசோன் என்னும் ஆற்றின் அருகில் எந்தோரிலே அழிக்கப்பட்டு, 1
10நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா, 1 யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும். 1
11அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், 1 அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும். 1
12தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே. 1
13என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், 1 காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும். 1
14நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், 1 அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும், 1
15நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து, 1 உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கச்செய்யும். 1
16யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு, 1 அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும். 1
17யேகோவா என்னும் பெயரை உடைய தேவனே 1 நீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமான தேவன் என்று மனிதர்கள் உணரும்படி, 1
18அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, 1 அவமானமடைந்து அழிந்துபோவார்களாக.