Psalms 103
1என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; 1 என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று. 1
2என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்; 1 அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே. 1
3அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, 1 உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி, 1
4உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, 1 உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, 1
5நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; 1 கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது. 1
6ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். 1
7அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார். 1
8யெகோவா உருக்கமும், இரக்கமும், 1 நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். 1
9அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை; 1 என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை. 1
10அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், 1 நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். 1
11பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, 1 அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது. 1
12மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ, 1 அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். 1
13தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, 1 யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். 1
14நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; 1 நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். 1
15மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; 1 வெளியின் பூவைப்போல் பூக்கிறான். 1
16காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; 1 அது இருந்த இடமும் இனி அதை அறியாது. 1
17யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், 1 அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது. 1
18அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது. 1
19யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்; 1 அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது. 1
20யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு, 1 அவருடைய வசனத்தின்படி செய்கிற 1 பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே, 1 அவரைத் துதியுங்கள். 1
21யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து, 1 அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே, 1 அவரைப் போற்றுங்கள். 1
22யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே, 1 அவரைப் போற்றுங்கள்; 1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று.