Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 97

1யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி, 1 திரளான தீவுகள் மகிழட்டும். 1

2மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; 1 நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். 1

3நெருப்பு அவருக்கு முன்சென்று, 1 சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது. 1

4அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது; 1 பூமி அதைக்கண்டு அதிர்ந்தது. 1

5யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது, 1 சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது. 1

6வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; 1 எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள். 1

7சிலைகளை வணங்கி, 1 விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; 1 தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். 1

8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, 1 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள். 1

9யெகோவாவே, பூமி அனைத்திற்கும் 1 நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர். 1

10யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; 1 அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, 1 துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார். 1

11நீதிமானுக்காக வெளிச்சமும், 1 செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. 1

12நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து, 1 அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

← Psalms 96Read In The App, Free →Psalms 98 →

Study Psalms 97

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150