Psalms 9
1யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; 1 உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். 1
2உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; 1 உன்னதமான தேவனே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன். 1
3என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, 1 உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள். 1
4நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து, 1 நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர். 1
5தேசங்களைக் கடிந்துகொண்டு, 1 துன்மார்க்கர்களை அழித்து, 1 அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர். 1
6எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; 1 அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்; 1 அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது. 1
7யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; 1 தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார். 1
8அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, 1 எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார். 1
9சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்; 1 நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். 1
10யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; 1 ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள். 1
11சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி, 1 அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள். 1
12ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, 1 அவர்களை நினைக்கிறார்; 1 எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார். 1
13மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே, 1 நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, 1 உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு, 1
14தேவனே நீர் எனக்கு இரங்கி, 1 என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். 1
15தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: 1 அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன. 1
16யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; 1 துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.) 1
17துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், 1 நரகத்திலே தள்ளப்படுவார்கள். 1
18எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; 1 ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. 1
19எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; 1 தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும் 1
20தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, 1 அவர்களுக்குப் பயமுண்டாக்கும், யெகோவாவே (சேலா).