Psalms 135
1அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்; 1 யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள். 1
2யெகோவாவுடைய வீட்டிலும், 1 நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே, 1 யெகோவாவை துதியுங்கள். 1
3யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; 1 அது இன்பமானது. 1
4யெகோவா யாக்கோபைத் தமக்காகவும், 1 இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். 1
5யெகோவா பெரியவர் என்றும், 1 நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன். 1
6வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், 1 யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார். 1
7அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, 1 மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, 1 காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார். 1
8அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார். 1
9எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் 1 அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
10அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று; 1
11எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், 1 கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து, 1
12அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். 1
13யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; 1 யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். 1
14யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, 1 தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். 1
15அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், 1 மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
16அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, 1 அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 1
17அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, 1 அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. 1
18அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், 1 அவைகளைப்போல் இருக்கிறார்கள். 1
19இஸ்ரவேல் குடும்பத்தாரே, 1 யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள். 1
20லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; 1 யெகோவாவுக்குப் பயந்தவர்களே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள். 1
21எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு 1 சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். 1 அல்லேலூயா.