Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 5

1யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், 1 என்னுடைய தியானத்தைக் கவனியும். 1

2நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்; 1 என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். 1

3யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; 1 காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 1

4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; 1 தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. 1

5வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; 1 அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர். 1

6பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; 1 கொலை வெறியர்களையும் 1 வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார். 1

7நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து, 1 உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். 1

8யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, 1 எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். 1

9அவர்கள் வாயில் உண்மை இல்லை, 1 அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; 1 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்; 1 தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள். 1

10தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; 1 அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; 1 அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்; 1 உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே. 1

11உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து, 1 எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; 1 நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; 1 உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக. 1

12யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, 1 கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.

← Psalms 4Read In The App, Free →Psalms 6 →

Study Psalms 5

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150