Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 111

1அல்லேலூயா, 1 செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன். 1

2யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், 1 அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. 1

3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, 1 அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். 1

4அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், 1 யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர். 1

5தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; 1 தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். 1

6தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், 1 தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். 1

7அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; 1 அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். 1

8அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், 1 அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள். 1

9அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, 1 தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; 1 அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது. 1

10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 1 அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; 1 அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

← Psalms 110Read In The App, Free →Psalms 112 →

Study Psalms 111

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150