Psalms 113
1அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; 1 யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள். 1
2இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. 1
3சூரியன் உதிக்கும் திசைதொடங்கி 1 அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும். 1
4யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; 1 அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. 1
5உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? 1
6அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். 1
7அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; 1 ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். 1
8அவனைப் பிரபுக்களோடும், 1 தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார். 1
9மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, 1 வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். 1 அல்லேலூயா.