Psalms 89
1யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; 1 உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன். 1
2கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்; 1 உமது உண்மையை வானங்களிலே நிறுவுவீர் என்றேன். 1
3என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து, 1 என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி: 1
4என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி, 1 தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா) 1
5யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், 1 பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும். 1
6வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்? 1 பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்? 1
7தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், 1 தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர். 1
8சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்? 1 உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. 1
9தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்; 1 அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கச்செய்கிறீர். 1
10நீர் ராகாபை + 89:10 ராகாப் ஒரு கற்பனையான கடல் பிராணி. யோபு 9:13, 26:12, ஏசாயா 51:9 87:4. ல் குறிப்பிடப்பட்ட ராகாப் புராணக் கதைகளிகளின் கடல் பாம்பு ஆகும் வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; 1 உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர். 1
11வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, 1 பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் 1 நீரே அஸ்திபாரப்படுத்தினீர். 1
12வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; 1 தாபோரும் + 89:12 தாபோர் ஒரு மலை. கலேலியா ஏரியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் உயரம் 555 அடிகளாகும் எர்மோனும் + 89:12 எர்மோன் ஒரு மலையின் பெயர். கலேலியா ஏரியின் வடகிழக்கில் 75 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. இதின் உயரம் 8,940 அடிகளாகும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும். 1
13உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது; 1 உம்முடைய கை பராக்கிரமமுள்ளது; 1 உம்முடைய வலதுகை உன்னதமானது. 1
14நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; 1 கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும். 1
15கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; 1 யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள். 1
16அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு, 1 உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். 1
17நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்; 1 உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும். 1
18யெகோவாவால் எங்களுடைய கேடகமும், 1 இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு. 1
19அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: 1 உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து, 1 மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன். 1
20என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; 1 என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன். 1
21என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்; 1 என்னுடைய கை அவனைப் பலப்படுத்தும். 1
22எதிரி அவனை நெருக்குவதில்லை; 1 துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை. 1
23அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி, 1 அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன். 1
24என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்; 1 என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும். 1
25அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும், 1 அவனுடைய வலது கையை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன். 1
26அவன் என்னை நோக்கி: 1 நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான். 1
27நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும், 1 பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன். 1
28என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; 1 என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும். 1
29அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், 1 அவன் ராஜாசனம் வானங்களுள்ளவரை நிலைநிற்கவும் செய்வேன். 1
30அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல், 1 என்னுடைய வேதத்தை விட்டு விலகி; 1
31என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்; 1
32அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும், 1 அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன். 1
33ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும், 1 என்னுடைய உண்மையில் மீறாமலும் இருப்பேன். 1
34என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும், 1 என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன். 1
35ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், 1 தாவீதிற்கு நான் பொய்சொல்லமாட்டேன். 1
36அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; 1 அவனுடைய சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். 1
37சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், 1 வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா) 1
38ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; 1 நீர் அபிஷேகம் செய்துவைத்தவன்மேல் கடுங்கோபமானீர். 1
39உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, 1 அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர். 1
40அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, 1 அவனுடைய பாதுகாப்பான இடங்களைப் பாழாக்கினீர். 1
41வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; 1 தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான். 1
42அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி, 1 அவனுடைய விரோதிகள் அனைவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர். 1
43அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து, 1 அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர். 1
44அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து, 1 அவனுடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர். 1
45அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி, 1 அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா) 1
46எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? 1 உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ? 1
47என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; 1 மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன? 1
48மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? 1 தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) 1
49ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு 1 சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே? 1
50ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும், 1 நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், 1
51யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், 1 வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும் 1 என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும். 1
52யெகோவாவுக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும். 1 ஆமென். ஆமென்.