Psalms 94
1நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவாவே, 1 நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும். 1
2பூமியின் நியாயாதிபதியே, 1 நீர் எழுந்து, பெருமைக்காரர்களுக்குப் பதிலளியும். 1
3யெகோவாவே, துன்மார்க்கர்கள் எதுவரைக்கும் மகிழ்ந்து, 1 எதுவரைக்கும் சந்தோஷமாக இருப்பார்கள்? 1
4எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி, 1 கடினமாகப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்? 1
5யெகோவாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி, 1 உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். 1
6விதவையையும் அந்நியனையும் கொன்று, 1 திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: 1
7யெகோவா பார்க்கமாட்டார், 1 யாக்கோபின் தேவன் கவனிக்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள். 1
8மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; 1 மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்? 1
9காதை உண்டாக்கினவர் கேட்கமாட்டாரோ? 1 கண்ணை உருவாக்கினவர் காணமாட்டாரோ? 1
10தேசங்களைத் தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளமாட்டாரோ? 1 மனிதனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியமாட்டாரோ? 1
11மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார். 1
12யெகோவாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், 1 நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கச்செய்து, 1
13தண்டித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு 1 போதிக்கிற மனிதன் பாக்கியவான். 1
14யெகோவா தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும், 1 தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். 1
15நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; 1 செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள். 1
16துன்மார்க்கர்களுக்கு விரோதமாக 1 எனது சார்பாக எழும்புகிறவன் யார்? 1 அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்? 1
17யெகோவா எனக்குத் துணையாக இல்லாவிட்டால், 1 என்னுடைய ஆத்துமா சீக்கிரமாக மவுனத்தில் தங்கியிருக்கும். 1
18என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, 1 யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. 1
19என்னுடைய உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது, 1 உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. 1
20தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ? 1
21அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, 1 குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள். 1
22யெகோவாவோ எனக்கு அடைக்கலமும், 1 என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாக இருக்கிறார். 1
23அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, 1 அவர்களுடைய பொல்லாப்பினால் அவர்களை அழிப்பார்; 1 நம்முடைய தேவனாகிய யெகோவாவே அவர்களை அழிப்பார்.