Psalms 146
1அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, 1 யெகோவாவை துதி. 1
2நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; 1 நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். 1
3பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம். 1
4அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; 1 அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும். 1
5யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, 1 தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். 1
6அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; 1 அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். 1
7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; 1 பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; 1 கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார். 1
8குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; 1 விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். 1 நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார். 1
9அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; 1 அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; 1 துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார். 1
10யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; 1 சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். 1 அல்லேலூயா.