Psalms 88
1என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவே, 1 இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 1
2என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; 1 என்னுடைய கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும். 1
3என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; 1 என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. 1
4நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு, 1 பெலனற்ற மனிதனைப்போல ஆனேன். 1
5மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்; 1 நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, 1 உமது கையால் அறுக்கப்பட்டுபோய்க் கல்லறைகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன். 1
6என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர். 1
7உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது; 1 உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா) 1
8எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, 1 அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; 1 நான் வெளியேற முடியாதபடி அடைபட்டிருக்கிறேன். 1
9துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது; 1 யெகோவாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, 1 உமக்கு நேராக என்னுடைய கைகளை விரிக்கிறேன். 1
10இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? 1 செத்துப்போன வீரர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா) 1
11கல்லறைக்குழியில் உமது கிருபையும், 1 அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ? 1
12இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது 1 நீதியும் அறியப்படுமோ? 1
13நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும். 1
14யெகோவாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? 1 ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்? 1
15சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்; 1 உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, 1 நான் மனங்கலங்குகிறேன். 1
16உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; 1 உம்முடைய பயங்கரங்கள் என்னை அழிக்கிறது. 1
17அவைகள் நாள்தோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, 1 ஒன்றாக என்னை வளைந்துகொள்ளுகிறது. 1
18நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; 1 எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.