Psalms 47
1எல்லா மக்களே, கைகொட்டி, 1 தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள். 1
2உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும், 1 பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார். 1
3மக்களை நமக்கு கீழ்படுத்தி, 1 தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார். 1
4தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா) 1
5தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார். 1
6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; 1 நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். 1
7தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள். 1
8தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்; 1 தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார். 1
9மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; 1 பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; 1 அவர் மகா உன்னதமான தேவன்.